இளமை.....இதோ.....இதோ....
நெரிசலான பேருந்து
நிரம்பிய இருக்கைகள்
இரும்பை கைப்பிடித்து
நிற்கும் பலர்
நிரம்பிய இருக்கைகள்
இரும்பை கைப்பிடித்து
நிற்கும் பலர்
கதை பேசும்
கல்லூரி இளைஞர்கள்
இருக்கையில் நிறைந்திருக்க
நிறைமாத கர்ப்பிணிக்கு
நிற்கும் அவலம்
கல்லூரி இளைஞர்கள்
இருக்கையில் நிறைந்திருக்க
நிறைமாத கர்ப்பிணிக்கு
நிற்கும் அவலம்
கலைந்த தலை
களைப்பான முகத்துடன்
முதியவர் ஒருவர்
முன் இருக்கையில்
களைப்பான முகத்துடன்
முதியவர் ஒருவர்
முன் இருக்கையில்
முதியவர் முன்வந்து
எழுந்து நிற்க
கர்ப்பிணியின் கால்களுக்கு
தற்கால ஓய்வு
எழுந்து நிற்க
கர்ப்பிணியின் கால்களுக்கு
தற்கால ஓய்வு
பலர் பார்வையில்
அவர்
படிக்காத கிழவன்
என் பார்வையில்
இவர்
பரிசுத்த இளைஞன்
அவர்
படிக்காத கிழவன்
என் பார்வையில்
இவர்
பரிசுத்த இளைஞன்
--------------
அன்புடன்,
கணேஷ்.
கணேஷ்.